அன்பின் மறு உருவம் நீயடி
என் உயிரின் அணுக்களும் நீயடி
உலக அழகியே
உண்மையின் உருவமே
என் மனதை கொள்ளை கொண்ட பெண்ணும் நீதான்
தாயின் அன்பை மிஞ்சியவளே
சோகமாக இருக்கும்போது என்னை கொஞ்சியவளே
என் உயிரினும் மேலான தேவதையே
என் மனதை உன்னிடம் ஒப்படைக்கிறேன்
அதை பாதுகாக்க அல்ல..
நான் இல்லையென்றாலும்
உன்னுள் நான் உயிர் வாழ……